ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவியின் உடலுக்கு நாளை இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது.
முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் உயர் அதிகாரிகள் உள்பட 14 பேர் பறந்து சென்ற ராணுவ ஹெலிகாப்டர், நீலகிரி மாவட்டம் காட்டேரியில் எதிர்பாராத விதமாக மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பிபின் ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்ததாக, இந்திய விமானப்படை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்நிலையில், மறைந்த முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவியின் உடலுக்கு, நாளை இறுதிச்சடங்கு நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள பிபின் ராவத்தின் இல்லத்தில் நாளை காலை 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பொதுமக்களின் அஞ்சலிக்காக உடல் வைக்கப்படும் என்றும், பின்னர் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு டெல்லி கன்டோன்மென்டில் அடக்கம் செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.