G-20 நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டம் – இந்தோனேஷியா

இந்தோனேஷியாவில் G-20 நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டம் இன்று தொடங்குவதையொட்டி அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியா, இந்தோனேசியா, அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளை உறுப்பினராகக் கொண்ட G-20 நாடுகள் கூட்டம் வரும் நவம்பர் மாதம் 15 மற்றும் 16-ம் தேதிகளில் இந்தோனேஷியயாவில் நடைபெற உள்ளது.

அதற்கு முன்னதாக உறுப்பு நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களின் 2 நாள் கூட்டம் பாலி நகரில் இன்று தொடங்கியுள்ளது. இதில் பங்கேற்பதற்காக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பாலி சென்றுள்ளார்.

G-20 அமைப்பின் தலைவராக ஆண்டுதோறும் ஒரு நாடு சுழற்சி முறையில் பதவி வகித்து வரும் நிலையில், வரும் டிசம்பர் 1 முதல் அடுத்த ஆண்டு நவம்பர் 30-ம் தேதி வரை இந்தியா தலைமைப் பொறுப்பேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Translate »
error: Content is protected !!