தமிழக அரசே பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிக்கும்

 

தமிழக அரசே பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிக்கும் சட்ட மசோதா சட்டசபையில் நிறைவேறியதையடுத்து, அ.திமு.க. மற்றும் பா.ஜனதா எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

தமிழ்நாட்டில் உள்ள 13 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை அரசே நியமிப்பது தொடர்பாக சட்ட முன்வடிவை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிமுகம் செய்தார். அதனடிப்படையில், சட்டசபையில் மசோதா குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,

உயர்கல்வியில் மாநில அரசை மதிக்காமல் கவர்னர் செயல்படும் போக்கு தலைதூக்கியிருக்கிறது மக்களாட்சியின் தத்துவத்துக்கே விரோதமாக உள்ளது எனவும், துணை வேந்தர் நியமன அதிகாரம் கவர்னரிடம் இருந்தால் அது சர்ச்சைக்கு வித்திடும் எனவும், கவர்னர் – மாநில அரசுக்கு இடையே அதிகார மோதலுக்கு வித்திடும் எனவும், துணை வேந்தர்களை கவர்னர் நியமிப்பதால் அரசு கொள்கை முடிவு எடுப்பதில் சில பிரச்சினைகள் ஏற்படுகிறது எனவும், துணைவேந்தர்கள் நியமனத்தில் கவர்னர் தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறார் எனவும், 13 பல்கலைக்கழகங்கள் வரலாற்று சிறப்புமிக்க பணிகளை ஆற்றி வருகின்றன எனவும் கூறினார்.

மேலும், பிரதமரின் சொந்த மாநிலமான குஜராத்தில், மாநில அரசு தான் துணைவேந்தரை நியமிக்கிறது எனவும், இதே நிலை தான் கர்நாடகம், தெலங்கானாவிலும் உள்ளது எனவும் கூறினார்.

 

Translate »
error: Content is protected !!