நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் கட்டட அனுமதி பெறுதல் தொடர்பான விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
பொதுமக்கள் கட்டட விண்ணப்பங்களையும், இணைப்பு ஆவணங்களையும் இணையதளம் வாயிலாக மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும். நேரடியாக சமர்ப்பிக்கும் முறை முற்றிலுமாக தவிர்க்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் சமர்பித்த ஆவணங்கள் சரியாக இருப்பின் விண்ணப்பித்த 3 தினங்களுக்குள் அனுமதி வழங்க வேண்டும், விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ளவாறு கட்டடம் கட்டப்படுவதை உறுதி செய்ய வேண்டும். தவறும் நபர்கள் மீது விதிகளின் படி நடவடிக்கை எடுக்க வேண்டும், அனைத்து நகராட்சி மற்றும் மாநகராட்சி ஆணையர்களுக்கு நகராட்சி நிர்வாக இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.