இல்லை என்பதை அழகாக சொன்ன ஒரே அமைச்சர் இவர் தான்

 

இல்லை என்பதை இவ்வளவு அழகாக சொன்ன ஒரே அமைச்சர் இவர் தான் என அமைச்சர் பொன்முடியை அவை முன்னவர் துரைமுருகன் பாராட்டியதால் அவையில் சிரிப்பலை ஏற்பட்டது.

கே.வி.குப்பம் பகுதிக்கு பெண்கள் கலை கல்லூரி வேண்டும் என அத்தொகுதி சட்டபேரவை உறுப்பினர் ஜெகன் மூர்த்தி கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் பொன்முடி, அந்த தொகுதியில் அரசு கல்லூரி உள்ளதாகவும் அதில் காலியிடங்களும் உள்ளதாக குறிப்பிட்ட அவர், வரும் காலங்களில் நிதி நிலைக்கு ஏற்ப தொகுதி மக்களுக்கு தேவைப்படும் பட்சத்தில் பெண்கள் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

அப்போது குறுக்கிட்ட அவை முன்னவர் துரைமுருகன், இல்லை என்பதை இவ்வளவு அழகாக சொன்ன ஒரே அமைச்சர் இவர் ஒருவர் தான் என தெரிவிக்க, இந்த பதிலை சொல்ல சொன்னவரே நீர்வளத்துறை அமைச்சர் தான் என்றும், அதை தான் அவையில் சொன்னேன் என கூறி இருந்தும் தன்னை பாராட்டியதற்கு நன்றி என கூறினார். இதனால் அவையில் சிரிப்பலை எழுந்தது.

 

Translate »
error: Content is protected !!