குமரியில் கன மழை பெய்யக்கூடும்

குமரியில் கன மழை பெய்யக்கூடும் என வானிலை ஆராய்ச்சி மய்யம் தெரிவித்துள்ள நிலையில் மாவட்டத்தில் தண்ணீரால் பாதிக்கக்கூடிய பகுதிகளில் மீட்ப்க்குழு வந்து தயாராக உள்ளது.

இந்த குழு மாவட்டத்தில் மழையால் அதிக பாதிப்பை ஏற்ப்படுத்த வாய்ப்புள்ள திக்குறிச்சி, சிதறால், குழித்துறை, சென்னித்தோட்டம், மங்காடு உட்பட பல பகுதிகளில் மீட்ப்பு பணிகள் செய்ய ஒரு குழு குழித்துறை அரசு மேல்நிலைப் பள்ளியில் தேசிய பேரிடர் மீட்புப்க்குழு ஆய்வாளர் எ. கே சவுகான் தலைமையிலும்
முஞ்சிறை, வைக்கல்லூர், காஞ்சபுறம் உட்பட பகுதிகளில் மீட்ப்பு பணிகளுக்காக கலிங்கராஜபுரம் பகுதியில் உதவி ஆய்வாளர் பிரணவு தலைமையிலும் வந்துள்ளது.

இந்த நிலையில் குமரி மாவட்ட கடலோர பகுதிகளில் கடல் சீற்றம் அதிகமாக காணப்படுவதுடன் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. கடல் சீற்றம் அதிகமாக இருப்பதால் தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் அனைத்து படகுகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!