அம்மா வீட்டிற்க்கு மனைவி சென்றதால் கணவர் விஷம் குடித்து சாவு

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள சேஷசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த வெண்ணிதுரை மகன் ராஜ்குமார் அதே பகுதியைச் சேர்ந்த சத்யா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் திருமணமாகி ஒரு ஆண்டுகள் மட்டுமே ஆகியுள்ளன ராஜ்குமார் தனியார் நிறுவனத்தில் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார் இவருக்கும் இவரது மனைவி சத்யாவுக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது சத்தியா கோபித்துக்கொண்டு அவருடைய அம்மா வீட்டிற்கு சென்றுள்ளார் இதனையடுத்து மனைவி ஊருக்கு சென்றதை அறிந்த ராஜ்குமார் மனமுடைந்து அவரது வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்துக் குடித்துள்ளார் குடித்துவிட்டு தனது மனைவி சத்தியாவிற்க்கும் செல்போனில் மூலம் சத்யா நான் பூச்சிக்கொல்லி மருந்து குடித்து விட்டேன் உடனடியாக நம் வீட்டிற்கு வா என்னைக் காப்பாற்று எனக் கூறியுள்ளார் ஆனால் மனைவி சத்திய வரவில்லை ராஜ்குமார் அவரது தோட்டத்தில் மயங்கி கீழே விழுந்து கிடந்தார் அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் அங்கு சிகிச்சை பெற்றுவந்த ராஜ்குமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சங்கராபுரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் மேலும் மனைவி கோபத்தில் அம்மா வீட்டிற்கு சென்றதால் விஷம் குடித்து கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Translate »
error: Content is protected !!