தமிழத்தில் நடைபெறவுள்ள நகர்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்குச்சாவடி முகவர்களுக்கு மத்திய, மாநில அரசுகளின் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை கட்டாயம் என மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தேர்தல் ஆணையம் அளித்துள்ள அடையாள அட்டையுடன் மத்திய மாநில அரசுகளின் ஏதாவது ஒரு அடையாள அட்டையை வாக்குச்சாவடி முகவர்கள் காண்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாக்குப்பதிவு நாளன்று வேட்பாளர்களின் முகவர்கள் இந்த அடையாள அட்டையை காட்டினால் மட்டுமே வாக்குச்சாவடிக்குள் அனுமதிக்கப்படுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.