பாஜக கட்சி தொடங்கி 42 வருடம் முடிந்த நிலையில் நாடு முழுவதும் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பாஜக பல்வேறு நிகழ்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதில் ஒரு பகுதியாக வரும் 19ம் தேதி தேதி ஊட்டச்சத்து திட்டம் எனும் விழிப்புணர்வு நிகழ்வை தமிழகத்தில் பாஜக மகளிர் அணி மூலம் நடத்த இருக்கின்றனர் அதற்கான கூட்டம் இன்று பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
அதற்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி, 42 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் உதித்தது பாஜக. 6ம் தேதி முதல் 20ம் தேதி வரை மக்கள் நல திட்டங்களை மக்களிடம் எடுத்து செல்லும் வகையில் கொண்டாடி வருகிறோம் என்று கூறினார்.1999ம் ஆண்டு பழங்குடியினர் மேம்பாட்டுக்காக தனி அமைச்சகம் உருவாக்கப்பட்டது. 367 உறைவிடப் பள்ளிகள் பழங்குடியினருக்காக உள்ளது. இன்னும் ஒரு சில ஆண்டுகளில் 1000 பள்ளிகளாக உருவாக்கப்படும்.வாஜ்பாய் ஆட்சி காலத்தில் தான் வடகிழக்கு மாநிலங்கள் குறித்து சிந்திக்க தொடங்கினோம் எனக்கூறி அவர், பாஜக ஆளும் மாநிலங்களில் தான் பழங்குடியினருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. இந்த மக்களின் பொருளாதார முன்னேற்றதிகு பல்வேறு கடன்களையும் நாம் வழங்கி வருகிறோம்.
பழங்குடி மக்கள் என பொய் கூறி இந்த திட்டத்தினை பயன்படுத்தி வந்த 1 லட்சத்திற்கும் அதிகமான போலி பயனாளர்களை நீக்கி சரியான மக்களுக்கு இந்த திட்டத்தினை சென்று சேர்த்துள்ளோம் எனவும் அவர் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் சத்துணவு திட்டத்திற்கு கொடுக்கப்படும் அனைத்து பொருட்களும் மத்திய அரசு தான் கொடுக்கிறது என்பது இங்கு யாருக்கும் தெரியாது எனவும் வரும் 19ம் தேதி ஊட்டச்சத்து திட்டம் எனும் விழிப்புணர்வு நிகழ்வை தமிழகத்தில் தொடங்க இருக்கிறோம் என்று அவர் கூறினார்.
அமைச்சர் பிடிஆர் பழனி வேல் டிவிட் குறித்து பேசிய அவர், ஆளுநர் கையெழுத்து போடவில்லை என்றால் உங்கள் எந்த பில்லும் பாஸ் ஆகாது என அவர் தெரிவித்தார்.