இல்லம் தேடி கல்வி திட்டம்

இல்லம் தேடி கல்வி திட்டத்தில் இதுவரை 6.47 லட்சம் தன்னார்வலர்கள் இணைந்துள்ளனர். மார்ச் 11ம் தேதி வரை வரை 1 லட்சத்து 78 ஆயிரத்து 525 இல்லம் தேடி கல்வி நிலையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இல்லம் தேடி கல்வி திட்டத்தில் சில சமூக அமைப்புகளை சார்ந்தவர்கள் மாநில, மாவட்ட, வட்டார அளவில் ஆலோசனை குழு உறுப்பினர்கள் மற்றும் ஒருங்கிணைபாளர்களாகவும் செயல்பட்டு வருகின்றனர்.

இல்லம் தேடி கல்வி திட்டத்தில் உள்ள தன்னார்வளர்கள், ஆலோசனைக்குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

குறுவளமைய அளவில் கல்வி கண்காட்சி நடத்தி ஆவணபடுத்திடவும்,  தன்னார்வலர்களுக்கு சான்றிதழ் வழங்கிடவும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

Translate »
error: Content is protected !!