ஆவின் விலை உயர்வு – தமிழக அரசு அதிரடி

மோடி அரசின் ஜிஎஸ்டி அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தனியார் அமைப்புகளும்,வியாபாரிகளும் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றன. ஆனால் மாநில அரசோ சத்தமில்லாமல் விலை உயர்வை அறிவித்துக் கொண்டிருக்கிறது.

பாக்கெட்டுகளில் விற்பனை செய்யப்படும் தயிர், நெய் ஆகிய பொருட்களுக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டதால், ஆவின் நிர்வாகம் விலையை உயர்வை அறிவித்துள்ளது.

கடந்த ஜூன் மாதம் 47வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இதில் பல பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான ஜிஎஸ்டி வரியை திருத்தியமைக்க ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அந்தக் கூட்டத்தில் குறிப்பாக தயிர், லஸ்சி, மோர் உள்ளிட்ட பால் பொருட்களுக்கு மத்திய அரசு 5 சதவிகிதம் ஜிஎஸ்டி விதிக்கப்பட்டது. இந்த ஜிஎஸ்டி வரி மாற்றம் ஜூலை 18ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.

இந்த நிலையில் தயிர், நெய் உள்ளிட்ட பொருட்களின் விலையை உயர்த்தி ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதன்படி, ஆவின் நெய் லிட்டருக்கு ரூ.45 உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே ரூ.535 ஆக இருந்த நெய் பாட்டில் இன்று முதல் ரூ.580 ஆக அதிகரித்துள்ளது. அரை லிட்டர் நெய் பாட்டில் ரூ.15-ம், 200 மில்லி நெய் ரூ.10-ம், 100 மில்லி ரூ.5-ம் உயர்ந்தது. 5 லிட்டர் நெய் ரூ.2,900, 15 கிலோ ரூ.9,680 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இதேபோல் ஆவின் தயிர் விலை 500 மில்லி பாக்கெட் ரூ.30-ல் இருந்து ரூ.35 ஆகவும், 200 மில்லி ரூ.18 ஆகவும், 400 கிராம் பிரிமியம் கப் தயிர் ரூ.40-ல் இருந்து 50 ஆகவும், பிரிமியம் தயிர் ஒரு கிலோ ரூ.100-ல் இருந்து ரூ.120 ஆகவும் அதிகரித்துள்ளது.50 கிராம் தயிர் விலை உயர்த்தப்படாமல் ரூ.5-க்கு விற்கப்படுகிறது. 200 மில்லி பாக்கெட் லஸ்சி ரூ.20, புரோபயோடிக் லஸ்சி ரூ.27-ல் இருந்து ரூ.30 ஆகவும், 200 மில்லி மோர் ரூ.15-ல் இருந்து ரூ.18 ஆகவும், 200 மில்லி மோர் பாட்டில் ரூ.10-ல் இருந்து ரூ.12 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த விலை உயர்வு இன்று முதல் அனைத்து ஆவின் விற்பனை மையங்கள் மற்றும் முகவர் மையங்களில் நடைமுறைக்கு வந்தது. இதை என்னவென்று சொல்வது வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் மத்திய அரசை காரணம் காட்டி விலையை உயர்த்துவதில் தமிழக அரசு தீவிரமா இருக்கிறது என்பது புரிகிறது என்கின்றனர் அப்பாவி மக்கள்.

Translate »
error: Content is protected !!