குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில் காட்டு யானைகள் அதிகரித்து உள்ளது. மேட்டுப்பாளையம் சாலையின் வனப்பகுதியிலிருந்து காட்டு யானைகள் கடந்த இரு வார காலமாக மரப்பாலம், ரன்னிமேடு போன்ற பகுதிகளில் வளம் வந்து கொண்டிருந்தது.
தற்போது, கரேமோரா கிராமத்தில் நள்ளிரவில் புகுந்த காட்டு யானைகள் அப்பகுதியில் உள்ள மரங்களை உடைப்பது உள்ளிட்ட காட்சிகள் அங்குள்ள வீடுகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.
தற்போது இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. வனத்துறையினர் விரைந்து யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.