நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்து 500ஐ கடந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2 ஆயிரத்து 593 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகவும், இதனால் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 873 ஆக உயர்ந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. நேற்று மட்டும் தீவிர தொற்றுக்கு 44 பேர் பலியாகியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் ஆயிரத்து 755 பேர் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பிய நிலையில், கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 25 லட்சத்து 19 ஆயிரத்து 479 ஆக அதிகரித்துள்ளது. தற்போது வரை இந்தியாவில் 187 கோடியே 67 லட்சத்து 20 ஆயிரத்து 318 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Translate »
error: Content is protected !!