ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் தற்போதைய நிரந்தரப் பிரதிநிதி ருசிரா காம்போஜ் கலந்துகொண்டார். அவர் பேசுகையில், “உக்ரைனில் நடக்கும் போர், வன்முறையை உடனடியாக நிறுத்துமாறு இந்தியா கேட்டுக்கொள் கிறது. ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும், குறிப்பாக வளரும் நாடுகளில் நிகழும் மோதலால் ஏற்படும் பொருளாதாரச் சவால்களைத் தணிப்பதற்கும் பேச்சு வார்த்தை மற்றும் இராஜதந்தி ரத்தையே இந்தியா விரும்புகிறது. உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடை யிலான பேச்சுவார்த்தைகளை இந்தியா ஊக்குவிக்கிறது. இது தொடர்பாக பிரத மர் நரேந்திர மோடி இரு நாடுகளுட னும் பல முறை பேசியுள்ளார்.
உக்ரைன்-ரஷ்யா மோதலால் ஏற்படும் பொருளாதார நெருக்கடிகளைத் தணிக்க சர்வதேச சமூகம் மற்றும் கூட்டாளி நாடுகளுடன் இந்தியா இணைந்து செயல்படும். போரின் தாக்கம் ஐரோப்பாவில் மட்டுமல்ல, உணவு, உரம் மற்றும் எரிபொருள் பாது காப்பு குறித்த கவலைகளை வளரும் நாடுகளில் அதிகப்படுத்தியுள்ளது.
உக்ரைன் நிலைமை குறித்து இந்தியா ஆழ்ந்த கவலையில் உள்ளது. இந்த மோதலின் விளைவாக குறிப்பாக பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியோர் உயிரிழந்துள்ளனர். பல லட்சக்கணக்கான மக்கள் வீடற்றவர்களாகவும், அண்டை நாடுகளில் தஞ்சம் அடைய வேண்டிய கட்டாயத்திலும் உள்ளனர் என்றார். இராஜதந்திர நடவடிக்கைகள் மூலமே இரு நாடுகளும் பிரச்சனை களுக்குத் தீர்வு காண வேண்டுமென வலியுறுத்தி வந்த இந்தியா திங்களன்று நடைபெற்ற கூட்டத்தில் ரஷ்யாவிற்கு எதிராக வாக்களித்திருப்பது.