100மீ தடை தாண்டும் ஓட்டத்தில் இந்திய வீராங்கனை சாதனை படைத்துள்ளார். ஆந்திராவைச் சேர்ந்த தடை தாண்டும் வீராங்கனை ஜோதி யார்ரஜ்ஜி, கடந்த 10ம் தேதி நடைபெற்ற சர்வதேச தடகளப் போட்டியில் தேசிய சாதனை படைத்தார்.
இந்நிலையில், தற்போது இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் லபரோ சர்வதேச தடகளப் போட்டியில் 100 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில், 13 புள்ளி 11 விநாடிகளில் இலக்கை அடைந்து மீண்டும் சாதனை படைத்துள்ளார்.