ஷீனா போரா கொலை வழக்கில் கைதான இந்திராணி முகர்ஜி ஆறரை ஆண்டுகளுக்கு பிறகு சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தார். பிரபல தனியார் தொலைக்காட்சியில் தலைமை பொறுப்பை வகித்த பீட்டர் முகர்ஜியின் மனைவியான இந்திராணி தனது முதல் கணவருக்கு பிறந்த மகள் ஷீனா போராவை கொலை செய்த வழக்கில் கடந்த 2015-ம் ஆண்டில் கைது செய்யப்பட்டார்.
பீட்டர் முகர்ஜியின் முதல் மனைவிக்கு பிறந்த மகன் ராகுல் முகர்ஜியை காதலித்ததால், ஷீனாபோராவை அவரது தாய் இந்திராணி கொலை செய்ததாக கூறப்பட்டது. நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் கடந்த ஆறரை ஆண்டுகளுக்கும் மேலாக சிறைவாசம் அனுபவித்து வந்த இந்திராணி முகர்ஜிக்கு கடந்த புதன்கிழமை உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதையடுத்து இந்திராணி முகர்ஜி பைகுலா சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.