இடைநின்ற மாணவர்கள் மீண்டும் பள்ளியில் சேர்ப்பு

கொரொனா காலத்தில் பள்ளியிலிருந்து இடைநின்ற 1,28,000 மாணவர்கள் கடந்த ஐந்து மாதத்தில் பள்ளியில் மீண்டும்  சேர்க்கப்பட்டுள்ளனர் என பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

திருச்சியில்  இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இல்லம் தேடி கல்வி திட்டம் வழியாக  கடந்த இரண்டாண்டுகள் பள்ளிக்கு சென்று கற்க தவறிய மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கபடும். இதனை கண்காணிக்க நான்கு கட்ட குழுக்கள் அமைக்கப்பட்டு, மற்ற எந்த அமைப்பினரும் அதில் ஊடுருவாதபடி எச்சரிக்கையுடன் செயல்படுத்துவோம் என்றார். மேலும், கொரொனா காலத்தில் பள்ளியிலிருந்து இடைநின்ற 1,28,000 மாணவர்கள் கடந்த ஐந்து மாதத்தில் பள்ளியில் மீண்டும்  சேர்க்கப்பட்டுள்ளனர் என தெரிவித்தார்.

Translate »
error: Content is protected !!