சென்னை நந்தனம் ஆவின் இல்லத்தில் 10 புதிய ஆவின் பொருட்களை பால்வளத்துறை அமைச்சர் நாசர் அறிமுகம் செய்த பின் செய்தியாளர்களை சந்தித்தார். அதில் அவர், ஆவின் சார்பாக இந்த 10 புதிய பொருட்களோடு சேர்த்து 225 வகையிலான பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது என கூறினார்.
விலை மற்றும் அளவு :
பலாப்பழ ஐஸ்கிரீம் – 125 மி.லி -45 ரூபாய்.
வெள்ளை சாக்லேட் – 45 கிராம் -30 ரூபாய்.
குளிர்ந்த காப்பி – 200 மி.லி – 35 ரூபாய்.
வெண்ணெய் கட்டி – 200 கிராம் – 130 ரூபாய்.
பாஸந்தி – 100 மி.லி – 60 ரூபாய்.
ஆவின் ஹெல்த் மிக்ஸ் – 250 கிராம் -120 ரூபாய்
பாலாடைக்கட்டி – 200 கிராம் – 140 ரூபாய்
அடுமனை யோகர்ட் – 100 கிராம் – 50 ரூபாய்
ஆவின் பால் பிஸ்கட் – 75 கிராம் – 12 ரூபாய்
ஆவின் வெண்ணெய் முறுக்கு- 200 கிராம் – 80 ரூபாய்.