இந்தி தேசிய மொழியா என்பது குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட வேண்டும் என, மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பேனர்ஜி தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நாடாளுமன்ற அலுவல் கூட்டத்தில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நாட்டில் ஆங்கில மொழிக்கு மாற்றாக இந்தி இருக்க வேண்டும் என கூறியிருந்தார்.
அவரது கருத்து சர்ச்சையாக மாறிய நிலையில், பல்வேறு தரப்பினரும் கண்டனங்களையும், எதிர்மறை கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
இந்தநிலையில், இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மம்தா பேனர்ஜி, இந்தியா பல்வேறு மொழிகளை கொண்ட பரந்த நாடு என்றும், இந்தி தேசிய மொழியாக்கப்பட வேண்டுமா? என்பது குறித்து மற்ற மாநில முதல்வர்களுடன் விவாதித்த பின் கருத்து தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.