தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக,
15.05.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் (நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, விருதுநகர்), சேலம், நாமக்கல் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
16.05.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் (நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, விருதுநகர்), சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
17.05.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் (நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, விருதுநகர்), சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
18.05.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் (நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, விருதுநகர்), கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், பெரம்பலூர், கரூர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
19.05.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையை பொறுத்தவரை:
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):
கலசப்பாக்கம் (திருவண்ணாமலை) 10, தஞ்சாவூர் PTO (தஞ்சாவூர்) 8, ஆரணி (திருவண்ணாமலை), பாரூர் (கிருஷ்ணகிரி), திருமானூர் (அரியலூர்), தஞ்சாவூர் (தஞ்சாவூர்) தலா 7, சிவலோகம் (கன்னியாகுமரி), பேச்சிப்பாறை (கன்னியாகுமரி), ஒகேனக்கல் (தருமபுரி), மாரண்டஹள்ளி (தருமபுரி), இடையபட்டி (மதுரை), புள்ளம்பாடி (திருச்சி), நட்ராம்பள்ளி (திருப்பத்தூர்) தலா 6, களியல் (கன்னியாகுமரி), பெனுகொண்டாபுரம் (கிருஷ்ணகிரி), தேன்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி), உத்திரமேரூர் (காஞ்சிபுரம்), வாலாஜா (இராணிப்பேட்டை), வல்லம் (தஞ்சாவூர்), ஆற்காடு (இராணிப்பேட்டை), அரியலூர் (அரியலூர்), எமராலாடு (நீலகிரி), திருக்காட்டுப்பள்ளி (தஞ்சாவூர்) தலா 5, உதகமண்டலம் (நீலகிரி), புடலூர் (தஞ்சாவூர்), பையூர் AWS (கிருஷ்ணகிரி), குந்தா பாலம் (நீலகிரி), சூளகிரி (கிருஷ்ணகிரி), சூரலக்கோடு (கன்னியாகுமரி), கிருஷ்ணகிரி (கிருஷ்ணகிரி), குன்னூர் PTO (நீலகிரி), சின்கோனா (கோயம்புத்தூர்), போளூர் (திருவண்ணாமலை), குழித்துறை (கன்னியாகுமரி), ஓசூர் (கிருஷ்ணகிரி) தலா 4, காஞ்சிபுரம் (காஞ்சிபுரம்), குன்னூர் (நீலகிரி), அய்யம்பேட்டை (தஞ்சாவூர்), கெட்டி (நீலகிரி), பெரியார் (தேனி), திருவையாறு (தஞ்சாவூர்), திருப்பத்தூர் (திருப்பத்தூர்), நெடுங்கல் (கிருஷ்ணகிரி), வால்பாறை PTO (கோவை), காரைக்குடி (சிவகங்கை), தக்கலை (கன்னியாகுமரி), சேலம் (சேலம்), ராயக்கோட்டா (கிருஷ்ணகிரி), அவலாஞ்சி (நீலகிரி), பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி), வேப்பூர் (கடலூர்), பென்னாகரம் (தர்மபுரி) தலா 3, ஏற்காடு (சேலம்), சின்னக்களார் (கோவை), தாமரைப்பாக்கம் (திருவள்ளூர்), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோவை), வலங்கைமான் (திருவாரூர்), தருமபுரி (தருமபுரி), சோலையார் (கோவை), மதுரை விமான நிலையம் (மதுரை), பாலக்கோடு (தருமபுரி), கோத்தகிரி (நீலகிரி), தொழுதூர் (கடலூர்), புதுச்சத்திரம் (நாமக்கல்), பெரம்பலூர் (பெரம்பலூர்), தேக்கடி (தேனி), கூடலூர் (தேனி), பொன்னை அணை (வேலூர்), திருவாரூர் (திருவாரூர்), தஞ்சை பாபநாசம் (தஞ்சாவூர்), பாபநாசம் (திருநெல்வேலி), கொடைக்கானல் (திண்டுக்கல்), சேந்தமங்கலம் (நாமக்கல்), பூதபாண்டி (கன்னியாகுமரி), மேலூர் (மதுரை) தலா 2, KVK காட்டுக்குப்பம் ARG (காஞ்சிபுரம்), நடுவட்டம் (நீலகிரி), மேல் பவானி (நீலகிரி), கிளென்மார்கன் (நீலகிரி), குளச்சல் (கன்னியாகுமரி), திண்டிவனம் (விழுப்புரம்), மரக்காணம் (விழுப்புரம்), அவினாசி (திருப்பூர்) , ஊத்தங்கரை (கிருஷ்ணகிரி), சோளிங்கர் (ராணிப்பேட்டை), வாணியம்பாடி (திருப்பத்தூர்), போடிநாயக்கனூர் (தேனி), நாகர்கோவில் (கன்னியாகுமரி), தேவாலா (நீலகிரி), ஆயிக்குடி (தென்காசி), பாப்பிரெட்டிப்பட்டி (தருமபுரி), இரணியல் (கன்னியாகுமரி), தென்காசி (தென்காசி), நீடாமங்கலம் (திருவாரூர்), மணப்பாறை (திருச்சி), தர்மபுரி PTO (தருமபுரி), கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர்), கூடலூர் பஜார் (நீலகிரி), வாலாஜாபாத் (காஞ்சிபுரம்), செங்கம் (திருவண்ணாமலை), தண்டராம்பேட்டை (திருவண்ணாமலை), ஜெயம்கொண்டம் (அரியலூர்), அஞ்சட்டி (கிருஷ்ணகிரி), காமாட்சிபுரம் (திண்டுக்கல்), ராசிபுரம் (நாமக்கல்), கொள்ளிடம் (மயிலாடுதுறை), மேட்டூர் (சேலம்) தலா 1.
மீனவர்களுக்கான எச்சரிக்கை :
15.05.2022 முதல் 17.05.2022 வரை: மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் பலத்தக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.