பிரம்மாண்டமாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கரடிக்கல் கிராமத்தில் சுந்தராஜபெருமாள் கோவில் திருவிழாவை முன்னிட்டு 283-வது ஜல்லிக்கட்டு போட்டி வெகு விமர்சையாக நடைபெற்று வந்தது.

இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க 600 காளைகளுக்கு, 450க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்று ஜல்லிக்கட்டு போட்டியானது நடைபெற்றது.

இதனை தொடர்ந்து தற்போது வரை ஐந்து சுற்றுகள் முடிவடைந்துள்ளது, இதுவரை 400 மாடுகள் வரை அவிழ்த்து விடப்பட்டு உள்ளது, ஒவ்வொரு சுற்றுக்கும் 60 மாடுபிடி வீரர்கள் என 300 பேர் இதுவரை பங்கேற்றுள்ளனர்.

இந்த நிலையில் பிற வாடியில் ஒவ்வொரு டோக்கன் எண்ணிலும் இரண்டு மூன்று நகல்கள் எடுத்துக் கொண்டு அதனை வைத்து மாட்டின் உரிமையாளர்கள் பிறவாடியில்  நுழைய முற்பட்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மாட்டின் உரிமையாளர்கள் வாடிவாசலில் தனது காளைகளை அவிழ்க்க முடியாத ஆத்திரத்தில் வெளியில் மாட்டை அவிழ்த்து விட்டு ரகளையில் ஈடுபட்டனர்.

கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த போலீசார் மாட்டின் உரிமையாளர்கள் மீது தடியடி நடத்தினர். மாட்டின் உரிமையாளர்கள் டோக்கன் முறையாக ஆன்லைனில் வழங்கப்பட்டிருந்தால் இதுபோல் பிரச்சினை ஏற்பட்டிருக்காது என கிராம பொதுமக்கள் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

 

Translate »
error: Content is protected !!