ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் வலியுறுத்தல்

நிலக்கரி துறையில், மாநிலத்துக்கு வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள 1 புள்ளி 36 லட்சம் கோடி ரூபாயை விரைந்து வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு கடிதம் எழுதிய அவர், மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் மேற்கொண்ட சுரங்கம் தொடர்பான பணிகளுக்கு நீண்ட நாட்களாக நிலுவை பாக்கி உள்ளதாகவும், இதனை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

முன்னதாக இந்த விவகாரத்தை சட்டமன்ற கூட்டத்தொடரில் பேசிய முதல்வர் ஹேமந்த் சோரன், நிலுவை பாக்கியை நிறுவனங்கள் வழங்காவிடில் , அந்நிறுவனங்களுக்கான உரிமம் ரத்து செய்யப்படும் எனவும்,  ஜார்க்கண்டில் பணியை தொடர முடியாது எனவும் எச்சரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

Translate »
error: Content is protected !!