காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு இரட்டை ஆயுள் தண்டனை

 

பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி அளித்த வழக்கில், காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து என்.ஐ.ஏ. நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முகமது யாசின் மாலிக் பல்வேறு தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததாக கூறி, கடந்த 2019ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.

மேலும், அவர் மீது தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுதல், தீவிரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டுதல், காஷ்மீர் அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டன.

இதனிடையே, கடந்த 10ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜரான யாசின் மாலிக், தன் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை குற்றவாளி என தேசிய புலனாய்வு முகமை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்தநிலையில் நேற்று அவர் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது,

அவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், தலா 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் வழங்கப்பட்டன. மேலும் அனைத்து தண்டனைகளும் ஒரே நேரத்தில் அனுபவிக்க வேண்டும் என கூறி நீதிபதி 10 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

 

Translate »
error: Content is protected !!