ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல் பாதிக்கப்பட்ட 213 பன்றிகளை கொல்லும் பணி துவங்கியது.
ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல் பாதிக்கப்பட்ட 213 பன்றிகளை கொல்லும் பணி துவங்கியது.கேரளா மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள பூலக்குண்டு பகுதியில் உள்ள பன்றி பண்ணையில், ஆப்பிரிக்கன் பன்றிக் காய்ச்சல் இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. அங்கிருந்து நோய் வேறு பகுதிகளுக்கு பரவாமல் தடுக்க பண்ணையில் பராமரிக்கப்பட்டு வரும் 213 பன்றிகளை கேரளா அரசு கொல்ல முடிவெடுத்த நிலையில் தற்சமயம் அதற்கான பணிகள் தொடங்கி இருக்கிறது. நோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள பன்றி பண்ணை தமிழக எல்லையில் இருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் உள்ளது.