தமிழ்நாட்டில் நடந்த கொலை கொள்ளை வழக்குகளில் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியது கொடநாடு கொலை கொள்ளை பரபரப்பு சம்பவம் என்றால் அது மிகை ஆகாது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிருடன் இருந்த வரை யாரும் செல்ல முடியாத கொடநாடு எஸ்டேட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்த பின்னர் நீலகிரி மாவட்டம் கோடநாடு பங்களாவில் கடந்த 2017 ஆம் ஆண்டு கொலை கொள்ளை சம்பவம் நடைபெற்றது. ஏராளமான ஆவணங்கள் பொண் பொருட்கள் கொள்ளையடித்ததாக பரபரப்பு தகவல் வெளியாகின.
இதுதொடர்பாக ஐ ஜி சுதாகர் தலைமையிலான தனிப்படை போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் அரசுத்தரப்பு சாட்சியங்கள் என 220 பேருக்கும் மேல் இதுவரை விசாரணை நடைபெற்றுள்ளது. கடந்தாண்டு அக்டோபர் மாதம் இந்த வழக்கில் சாட்சியங்களை மறைத்ததாக இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சேலத்தில் விபத்தில் உயிரிழந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கார் ஓட்டுனரான கனகராஜின் சகோதரர் தனபால் அவருடைய உறவினர் ரமேஷ் ஆகிய இருவரை கூடுதலாக தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர். தற்ப்போது இந்த வழக்கு சம்மந்தமான விசாரணை உதகையில் நடைபெறாமல் கோவையில் நடைபெற்று வருகிறது.
கோவை பி ஆர் எஸ் கிரவுண்டில் உள்ள அலுவலகத்தில் தனிப்படை போலீசார் தொழிலதிபர் செந்தில்குமார்டம் மூன்றாவது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர். கொடநாடு பங்களாவில் கட்டுமானப் பணிகளுக்காக செந்தில்குமார் அவரது தந்தை ஆறுமுகசாமி நடத்தும் நிறுவனத்திலிருந்து மணல் உள்ளிட்ட கட்டுமான பொருட்கள் தரப்பட்டிருக்கின்றன. சென்னை சிஐடி நகரில் ஷைலி நிவாஷ் அபார்ட்மெண்டில் நடந்த வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையின்போது கிடைக்கப்பெற்ற ஆவணங்களின் அடிப்படையில் ஆறுமுகசாமி மற்றும் செந்தில்குமாருக்கு ஐ ஜி சுதாகர் சம்மன் அனுப்பி இருந்த நிலையில் தனிப்படை போலீசார் முன் செந்தில் குமார் ஆஜராகி இருக்கின்றார்.
இரண்டாவது நாளன்று ஆறுமுகசாமி மற்றும் செந்தில்குமார் இருவரிடமும் விசாரணை நடைபெற்றது. இந் நிலையில் 3-வது நாளான இன்று செந்தில்குமாரிடம் விசாரணை நடந்து வருகின்றன. கொடநாடு கொலை கொள்ளை சம்பவத்தின் முக்கிய குற்றவாளிகளை கைது செய்யும் பொருட்டு கிடைக்கப்பெறும் அனைத்து தடயங்களை வைத்தும் ஐஜி சுதாகர் தலைமையிலான தனிப்படை போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.