ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியை வீழ்த்தி கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஷார்ஜாவில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியின் 41 லீக் ஆட்டத்தில் கொல்கத்தா மற்றும் டெல்லி அணிகள் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் இயன் மோர்கன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். பின்னர் டெல்லி அணியில் இருந்து தொடக்க வீரர்களாக ஷிகர் தவன், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் களமிறங்கினர். கொல்கத்தா அணி பந்துவீச்சாளர்களின் சிறப்பான பந்துவீச்சால் டெல்லி அணி பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 9 விக்கெட்டுகளை இழந்து 127 ரன்களை எடுத்தது. பின்னர் 128 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற எளிய இலக்குடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விளையாடி 18.2 ஓவர்களில் 130 ரன்கள் எடுத்து 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.