படுக்கைகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள் உள்ளிட்டவை தயார் நிலையில் வைக்க கடிதம்

 

படுக்கைகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள் உள்ளிட்டவை தயார் நிலையில் வைத்துக் கொள்ளுமாறு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம்.

சென்னை செங்கல்பட்டு உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கொரொனா அதிகரித்துவரும் காரணத்தினால் படுக்கைகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள் உள்ளிட்டவை தயார் நிலையில் வைத்துக் கொள்ளுமாறு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் எழுதிய கடிதத்தில்,

”இந்தியாவில் கடந்த ஒரு வாரமாக கொரொனா தொற்றானது அதிகரித்து வருகிறது எனவே தமிழ்நாட்டில் கொரொனாவை கட்டுப்படுத்துவதற்கு மாநில அரசு விதிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும்.

குறிப்பாக தமிழகத்தில் சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக கொரொனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது, எனவே அந்தந்த மாவட்ட அதிகாரிகள் மண்டல அளவிலும் தெரு அளவிலும் கண்காணிக்க வேண்டும். அது மட்டுமில்லாமல் எட்டு மாவட்டங்களில் தனிமைப்படுத்தப்பட்ட அவர்களின் எண்ணிக்கை சற்று அதிகமாக உள்ளது, எனவே இந்தப் பகுதிகளில்  கொரொனா கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் உடனடியாக அதிகாரிகள் ஈடுபட வேண்டும்.

கல்லூரி விழாக்கள் முடிந்த பிறகு அந்த கல்லூரி விடுதிகளில் கொரொனா கிளஸ்டர் உருவாகுகிறது அதேபோல் குடும்பங்களிலும் இந்த கிளஸ்டர் உருவாகிறது எனவே இந்த இடங்களில் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள விதிமுறைகளின்படி அதிகாரிகள் பின்பற்ற வேண்டும்.

அதிகாரிகள் தடுப்பூசி செலுத்துவதை ஊக்குவிக்க வேண்டும், பொது இடங்களில் முக கவசம் அணிந்து இருக்கிறார்கள் என்பதை உறுதி செய்ய வேண்டும், ஒரே இடங்களில் கிளஸ்டர் உருவாகினால் அந்த இடத்தை உடனடியாக சுகாதாரத் துறை அலுவலர்களை வைத்து சுத்தம் செய்து நோய் பரவாத வண்ணம் வைத்துக் கொள்ள வேண்டும். கல்விநிலையங்களில் ஏதாவது கிளஸ்டர் உருவாகினால் சுகாதாரத்துறை அதிகாரி அங்கே சென்று முழுமையாக பார்வையிட்டு அங்கு உள்ளவர்களை பரிசோதிக்க வேண்டும்.

கொரொனா அதிகரித்துவரும் காரணத்தினால் படுக்கைகள் ஆக்சிஜன் சிலிண்டர்கள் உள்ளிட்டவை தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும். தகுந்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு அளவை கட்டுப்படுத்த வேண்டும் ” என குறிப்பிட்டுள்ளார்.

 

Translate »
error: Content is protected !!