சென்னை ஜார்ஜ் கோட்டை வளாகத்தில், மத்திய அரசால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அக்னிபாத் திட்டம் குறித்து லெப்டினன்ட் ஜெனரல் அருண் விளக்கினார்.
இந்த புதிய திட்டத்தின் மூலம் நாட்டிற்கு சேவை செய்ய விருப்பம் உள்ள 17.5 முதல் 21 வயதை உடையவர்கள் இந்த அக்னிபாத் திட்டத்தில் சேரலாம். அவர்களுக்கு 6 மாதங்கள் பயிற்சி அளிக்கப்படும். ராணுவம், கடற்படை, விமானப்படை உள்ளிட்ட பாதுகாப்பு பணிகளில் அவர்கள் 4 ஆண்டுகள் சேவை செய்வார்கள். இந்த 4 ஆண்டுகள் அவர்கள் அக்னிபாத் என்று அழைக்கப்படுவார்கள். முதல் ஆண்டு வருடத்திற்கு 4.76 லட்சம் ஊதியமாக கிடைக்கும். 4 ஆம் ஆண்டு 6.92 லட்சம் வீதம் ஊதியம் உயர்த்தி அளிக்கப்படும். 4 ஆண்டுகள் நாட்டிற்கு சேவை செய்த பிறகு இந்த அக்னிபாத் திட்டத்தின் மூலம் சேர்ந்தவர்களில் 25 சதவீதம் பேர் ராணுவத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுவார்கள். மீதம் உள்ளவர்கள் அவர்களின் சொந்த விருப்பத்தின் பேரில் செயல்படலாம். அக்னிபாத் திட்டத்தின் மூலம் சேர்ந்த வீரர்களுக்கு 4 ஆண்டுகளில் ஏதாவது அசம்பாவிதங்கள் நடந்தால் அதாவது அவர்கள் இறக்க நேர்ந்தால் 1 கோடி வழங்கப்படும். அதே போல கை கால்கள் இழக்கும் பட்சத்தில் சேவா நிதி மூலமாக 44 லட்சம் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.