மகாத்மா காந்தியின் தூய்மை இந்தியா கனவு நனவாகும் – பாஜக மூத்த தலைவர் கவுரவ் பாட்டியா

டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மூத்த தலைவர் கவுரவ் பாட்டியா,

பிரதமர் மோடியின் தீவிர நடவடிக்கையால் மகாத்மா காந்தியின் தூய்மை இந்தியா கனவு நனவாகும் எனவும், கடந்த 2014-ம் ஆண்டு மகாத்மா காந்தியின் பிறந்த நாளான அக்டோபர் 2-ம் தேதி தூய்மை இந்தியா திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்து, இந்த திட்டத்துக்காக 2021-2026-ம் ஆண்டுகளில் கிராமங்களுக்காக ரூ.7,192 கோடியும் நகரங்களுக்காக ரூ.1,41,678 கோடியும் செலவிடப்பட திட்டமுள்ளது எனவும், இதன்மூலம் நாடு முழுவதும் கழிப்பறைகள் கட்டப்பட்டு வருகின்றன எனவும், இதுவரை 58,000 கிராமங்கள், 3,300 நகரங்கள் பயன் பெற்றுள்ளன எனவும் கூறினார்.

மேலும், தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் திடக்கழிவு, நீர் கழிவு மேலாண்மை திட்டங்கள் திறம்பட செயல்படுத்தப்பட்டுகின்றன எனவும், நாட்டின் வரலாற்றில் தங்க எழுத்துகளால் எழுதப்பட்ட வரலாறாக தூய்மை இந்தியா திட்டம் மாறும் என்பதில் சந்தேகமில்லை எனவும் கூறினார்.

 

 

Translate »
error: Content is protected !!