கேரள பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து விட்டு சென்னை சென்ட்ரலுக்கு ரயிலில் தப்பி ஓடி வந்தவரை சிசிடிவி காட்சி உதவியோடு சென்ட்ரல் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் பிடித்து கைது செய்துள்ளனர்.கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியில், பெண் ஒருவரிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக, அங்குள்ள சிசிடிவி காட்சியின் அடிப்படையில், தடியாட்டபரம்ப காவல் நிலைய போலீசார், ரத்தன் என்பவனை கைது செய்தனர்.
இந்நிலையில், பெண்ணிடம் சில்மிஷம் செய்து விட்டு, சென்னைக்கு ரயிலில் தப்பியோடிய நபர் குறித்து, சமந்தப்பட்ட கேரளா போலீசார், சென்னை ரயில்வே பாதுகாப்பு படை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தது மட்டுமல்ல, எர்ணாகுளம் ரயில் நிலையத்துக்கு வந்த சிசிடிவி காட்சியையும் அனுப்பி வைத்தனர்.
இது குறித்து, ரயில்வே பாதுகாப்பு படை குற்ற தடுப்பு புலனாய்வு பிரிவு போலீசார், எர்ணாக்குளத்தில் இருந்து சென்னை வந்த வெஸ்ட் கோஸ்ட் ரயிலில், பெரம்பூர் – சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு இடையே முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் சோதனை செய்தனர். அப்போது, கேரள போலீசார் கொடுத்த அடையாள தகவலின் படி, அதே நபர் ரயிலில் பயணம் செய்ததை உறுதி செய்தனர்.
சந்தேகத்தின் பேரில், சென்னை சென்ட்ரல் ரயில்வே பாதுகாப்பு படை காவல் நிலையம் அழைத்து வரப்பட்டு விசாரித்த போது, பிஸ்வாத்ஜி சர்கார் என்பதும், பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்டு, போலீசாருக்கு பயந்து சென்னைக்கு தப்பி வந்ததை ஒப்பு கொண்டார்.
இதையடுத்து, சென்னை சென்ட்ரல் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார், தடியாட்டபரம்ப காவல் நிலையத்துக்கு கொடுக்கப்பட்ட தகவல்படி, பிஸ்வாத்ஜி சர்காரை, கேரள போலீசாரிடம் ஒப்படைத்தனர்.