கபடி போட்டி நடைபெறும் இடத்தில் மருத்துவக் குழு-உயர்நீதிமன்றம் உத்தரவு

கபடி போட்டி நடைபெறும் இடத்தில் மருத்துவக் குழு இருக்க வேண்டும். அனைத்து முதலுதவிக்கான சிகிச்சைகள் உபகரணங்கள் இருக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்தது.
கபடி போட்டி நடத்த அனுமதி கோரிய வழக்கில் கடும் கட்டுப்பாடுகளை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுதொடர்பாக பிறப்பிக்கப்பட்ட தீர்ப்பு விவரம்:

கபடி போட்டியில் பங்கேற்கும் வீரர்களின் ஆடைகளில் அரசியல், ஜாதியை குறிக்கும் சின்னங்களோ அல்லது அரசியல் மற்றும் ஜாதியை குறிக்கும் தலைவர்களின் படங்களோ இருக்கக் கூடாது.

அனைத்து முதலுதவிக்கான சிகிச்சைகள் உபகரணங்கள் இருக்க வேண்டும்.

விளையாட்டு போட்டி நடைபெறும் இடத்தில் தேவையான வசதிகளை செய்து கொடுத்திருக்க வேண்டும்.

நிபந்தனைகளை மீறும் வகையில் போட்டி நடந்தால் சம்பந்தப்பட்ட காவல்துறை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் மீது நடவடிக்கை எடுத்து போட்டியை நிறுத்தலாம் என்று நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

முன்னதாக, திருநெல்வேலியைச் சேர்ந்த தாசன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், திருநெல்வேலி மாவட்டம், விஜய நாராயணபுரத்தில் மாலை நேர கபடி போட்டி நடத்த அனுமதி கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி சக்தி குமார சுகுமார குருப் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி கபடி போட்டி நடத்த கடும் கட்டுபாடுகளை விதித்து அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்தார்.

கடலூர் அருகே கபடி விளையாட்டின்போது, வீரர் மயங்கி விழுந்து உயிரிழந்தது நினைவுகூரத்தக்கது.

Translate »
error: Content is protected !!