தமிழகம் முழுவதும் நாளை மெகா தடுப்பூசி முகாம்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்த பொது குறிப்பாக கடந்த ஆண்டு ஜனவரி 16 ஆம் தேதி அன்று முதல் தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. முதற்கட்டமாக மருத்துவப் பணியாளர்கள், முன் களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போட தொடங்கப்பட்டது. அதற்குப் பின் படிப்படியாக 60 வயதிற்கு மேற்பட்டவர்கள், 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் என தற்பொழுது 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் கோவக்சின் மற்றும் கோவிட்ஷீல்டு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அதேபோல, 15-18 வயதுடையவர்களுக்கு கோவக்சின் தடுப்பூசியும், 12-14 வயதுடையவர்களுக்கு கோர்பவாக்ஸ் தடுப்பூசியும் போடப்பட்டு வருகிறனர்.

இந்த நிலையில் தடுப்பூசி போடும் பணி தொடங்கிய காலத்தில் பொதுமக்களிடம் போதுமான விழிப்புணர்வு இல்லாததால் தடுப்பூசி போடும் பணி பின்னடைவில் இருந்தது. மேலும், அந்த காலகட்டத்தில் தடுப்பூசி செலுத்தி கொள்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

Translate »
error: Content is protected !!