பேஸ்புக் தளத்தின் உரிமையாளரான மெட்டா நிறுவனம் மெட்டாவெர்ஸ் பயிற்சி அகாடமியை பிரான்சில் தொடங்க உள்ளது. அதன்படி ஒரு பிரெஞ்சு டிஜிட்டல் பயிற்சி நிறுவனத்துடன் இணைந்து தலைநகர் பாரிஸ் உள்ளிட்ட 5 நாகரங்களில் 100 மாணவர்களுக்கு, மெட்டா பயிற்சி அளிக்க உள்ளது. டிஜிட்டல் உலகுக்கான அதிவேக தொழில்நுட்ப டெவலப்பர்கள், சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்களுக்கான பயிற்சி இந்த அகாடமியில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பயிற்சி அளிக்கப்படுவோரின் 30 சதவீதம், பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.