தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, என்னை அடித்தால் திருப்பி அடிப்பேன் என திமுக குறித்து கூறியிருந்தார்.
இந்நிலையில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், “அண்ணாமலை எல்லை மீறி நடந்து வருகிறார்.
கண்ணியம் அற்ற வார்த்தைகளைப் பயன்படுத்தும் அவரது பேச்சு, அவரது கட்சியின் நடத்தை மற்றும் சிந்தனையைக் காட்டுகிறது” என கண்டனம் தெரிவித்துள்ளார்.