குரங்கம்மை போன்ற பல்வேறு நோய்கள் அடுத்தடுத்து பரவி வருவது அபாயகரமானது என்று உலக சுகாதார அமைப்பின் அவசரகால இயக்குநர் மைக் ரியான் எச்சரித்துள்ளார்.
காலநிலை மாற்றம் வறட்சி போன்ற வானிலை நிலைமைகளும் இதற்கு காரணமாக இருப்பதால் விலங்குகளில் இருந்து மனிதர்களுக்கு நோய் பரவி வருவதாகவும் கூறியுள்ளார்.
அதுவும் எந்த தொற்றாக இருந்தாலும் அது குறைவான காலங்களிலேயே மனிதர்களுக்கிடையே வேகமாகப் பரவி வருவதாகவும் கவலை தெரிவித்தார். ஆப்பிரிக்காவின் லஸ்ஸா காய்ச்சல், எபோலா போன்றவை பல ஆண்டு இடைவெளிக்கு பின்தான் தொடங்கும் என்றும் தற்போது சில மாதத்திலேயே நோய்கள் பரவி வருவதாகவும் இதனை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும் என்றும் மைக் ரியான் தெரிவித்துள்ளார்.