உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், நமீபியா அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அபுதாபியில் நடைபெற்ற 21-வது லீக் ஆட்டத்தில் ஸ்காட்லாந்து மற்றும் நமீபியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற நமீபியா அணி, பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஸ்காட்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 109 ரன்கள் மட்டுமே எடுத்தது.
பின்னர் 110 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் நமீபியா அணி களம் இறங்கியது. 19 புள்ளி 1 ஓவர்களில் நமீபியா அணி, 6 விக்கெட்டுகளை இழந்து 115 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.