நரேந்திர கிரி தற்கொலை: சிபிஐ-யிடம் வழக்கு ஒப்படைப்பு

அகில பாரத அகாரா பரிஷத் அமைப்பின் தலைவர் நரேந்திர கிரியின் மரண வழக்கை உத்திரபிரதேச அரசு சிபிஐ இடம் ஒப்படைத்துள்ளது.

கடந்த திங்கட்கிழமை மஹந்த் நரேந்திர கிரி, தமது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மடாதிபதியின் சீடர்கள் 3 பேர் தன்னை மிரட்டியதால் மன அழுத்தத்தால் தூக்கில் தொங்கியதாக 8 பக்க கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார். மேலும் நரேந்திர கிரி தற்கொலை செய்து கொண்டதன் வீடியோ பதிவும் போலீசாருக்கு கிடைத்துள்ளது.

நரேந்திர கிரியின் மரணம் தொடர்பாக மேலும் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் இதுதொடர்பான வழக்கு விசாரணையை சிபிஐ இடம் ஒப்படைக்க முதலமைச்சர் யோகி ஆதித்தியநாத் உத்தரவிட்டுள்ளார்.

Translate »
error: Content is protected !!