பனிப்போருக்குள் இழுத்துச் செல்லும் நேட்டோ – சீனா குற்றச்சாட்டு

 

உலகத்தை மீண்டும் பனிப்போருக்குள் இழுத்துச் செல்லும் வேலையில் நேட்டோ ஈடுபட்டுள்ளதாக சீனா குற்றம் சாட்டியுள்ளது. உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவுக்கு உதவினால் கடும் விளைவுகளைச் சந்திக்க வேண்டும் என்று நேட்டோ எச்சரித்தது.

இது குறித்து ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள சீனத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரச்சினைகளை தூண்டும் வகையிலான பேச்சு இது என்று சுட்டிக்காட்டியுள்ளது. நேட்டோவின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள், சந்தேகங்கள் மற்றும் சீனாவிற்கு எதிராக அழுத்தத்தை உருவாக்கும் எந்தவொரு முயற்சியையும் உறுதியாக எதிர்ப்பதாகவும் கூறியுள்ளது.

சீனாவின் நீண்டகால மற்றும் நிலையான நிலைப்பாட்டை முழுமையாக புரிந்து கொள்ள வேண்டியது அவசியம் என்று குறிப்பிட்டுள்ள தூதரகம்,  பனிப்போர் தந்திரங்களைப் பயன்படுத்துவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

 

Translate »
error: Content is protected !!