நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம் இந்து முறைப்படி நடைபெறும் என இயக்குநர் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.
திரைப்பட இயக்குநர் விக்னேஷ் சிவன், நடிகை நயன்தாரா திருமணம் ஜுன் 9ம் தேதி சென்னை மகாபலிபுரத்தில் நடைபெறவுள்ள நிலையில் இயக்குநர் விக்னேஷ் சிவன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்,
ஜூன் 9ம் தேதி நயன்தாராவுடன் திருமணம் நடைபெறவுள்ளது என்றும் திருப்பதியில் திருமணம் செய்யலாம் என யோசித்தோம். ஆனால், தவிர்க்க முடியாத காரணத்தால் சென்னையில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெறுகிறது என கூறிய அவர், ஜூன் 11 ம் தேதி இருவரும் சேர்ந்து செய்தியாளர்களை சந்திப்போம் என்றும் எங்களது திருமணம் இந்து முறைப்படி நடைபெறும் என கூறினார்.