சுங்க கட்டணங்களை வசூலிக்க புதிய தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படும் என்றும், நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகள் விரைவில் அகற்றப்படும் என்றும் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி உறுதியளித்தார்.
நேற்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் உறுப்பினர்களின் கேள்விக்கு பதிலளித்த மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்காரி, நாடு முழுவதும் நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகள் விரைவில் அகற்றப்படும் என்று தெரிவித்தார்.
இதன் மூலம் சாலைகளில் நீண்டவரிசை இருக்காது என்று கூறிய அவர், சுங்கக் கட்டணம் வசூலிக்க புதிய வழிமுறைகளை பயன்படுத்துவது குறித்து அரசு ஆலோசனை நடத்தி வருவதாகவும் தெரிவித்தார்.
செயற்கைக்கோள் மூலம் ஜிபிஎஸ் கண்காணிப்பு மற்றும் மேம்படுத்தப்பட்ட நம்பர் பிளேட் மூலம் சுங்கக் கட்டணம் வசூலிப்பது குறித்து ஆலோசனைகள் நடந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.