சென்னை பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த பெண் காவலர்களுக்கு புதிய சீருடை

 

தலைமைச் செயலகம், ஆளுநர் மாளிகை உள்ளிட்ட பல்வேறு முக்கிய இடங்களில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடும்  சென்னை பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த பெண் காவலர்களுக்கு சபாரி எனப்படும் புதிய சீருடை வழங்கப்பட்டுள்ளது. வழக்கமாக பாதுகாப்பு பணிகளில் ஈடுபடும் பெண் காவலர்களுக்கு காக்கி யூனிபார்ம் மற்றும் சீருடை அல்லாத கலர் ட்ரெஸஸில் பணியில் ஈடுபடுவார்கள்

சென்னை பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்தவர்கள் கட்டாயம் சபாரி சீருடை அணிய வேண்டும் என்று காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டதன் அடிப்படையில் சென்னை பாதுகாப்பு பிரிவில் ஈடுபடும் ஆண் காவலர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் சபாரி சீருடை போல பெண் காவலர்களுக்கும் சென்னை பாதுகாப்பு பிரிவில் சபாரி டிரஸ் வழங்கப்பட்டுள்ளது.

தலைமைச் செயலகம் , ஆளுநர் மாளிகை, காவல் ஆணையரக அலுவலகம், சென்னை விமான நிலையம் ,விஐபி பாதுகாப்பு வருகை மற்றும் அவர்களுக்கான பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போதும் பெண் காவலர்கள் சபாரி சீருடையில் பணியாற்றுவார்கள்.

தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமைச் செயலகம் உள்ளிட்ட பிற இடங்களுக்கு செல்லும் போதும் பாதுகாப்பு பணியில் சென்னை பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த பெண் காவலர்கள் சபாரி புதிய சீருடையில் பணியாற்றுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Translate »
error: Content is protected !!