உத்தரப்பிரதேச மாநிலம் லக்கீம்பூரில் விவசாயிகள் மீது, மத்திய அமைச்சர் அமித் மிஷ்ராவின் கார் மோதியது தொடர்பான புதிய வீடியோ வெளியாகி வைரலாகி உள்ளது.
லக்கீம்பூருக்கு வருகை தந்த மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்திய விவசாயிகள் மீது, மத்திய அமைச்சருக்கு சொந்தமான கார் வேகமாக மோதியதில் 4 பேர் பலியாகினர். இந்தக் காரை மத்திய அமைச்சரின் மகன் ஓட்டி வந்ததாகவும், வேண்டுமென்ற காரை கூட்டத்தில் செலுத்தி விவசாயிகளைக் கொன்றதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ஆனால் இதனை திட்டவட்டமாக மறுத்த மத்திய அமைச்சர் அமித் மிஸ்ரா, காரை தனது மகன் இயக்கவில்லை என்று கூறினார்.
இந்நிலையில் விவசாயிகள் மீது கார் மோதியது தொடர்பான புதிய வீடியோ வெளியாகி உள்ளது. இதில் அமைதியாக சென்று கொண்டிருந்த விவசாயிகளின் மீது அதிவேகத்தில் காரை மோதுவது போன்ற காட்சிகள் பதிவாகியுள்ளன. இந்த வீடியோவை தனது டிவிட்டரில் பகிர்ந்துள்ள காங்கிரஸ் எம்பி வருண் காந்தி,விவசாயிகளின் மரணங்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.
The video is crystal clear. Protestors cannot be silenced through murder. There has to be accountability for the innocent blood of farmers that has been spilled and justice must be delivered before a message of arrogance and cruelty enters the minds of every farmer. 🙏🏻🙏🏻 pic.twitter.com/Z6NLCfuujK
— Varun Gandhi (@varungandhi80) October 7, 2021