பீகார் முதல்வராக இருந்த நிதிஷ் குமார், பாஜக உடனான கூட்டணியை முறித்துக் கொண்டார்.
இந்நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், பாஜகவிற்கு அச்சுறுத்தல் தரக்கூடிய வகையில் நிதிஷ்குமார் எடுத்துள்ள முடிவு வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒன்று அவருக்கு பாராட்டுகள் என்றார். மேலும் இந்தியா முழுவதும் இது போல் ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைக்க வேண்டும் என்றார்.