பத்திரிக்கையாளர் முகமது ஜுபைருக்கு எதிராக எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என உச்சநீதிமன்றம் உத்தரப் பிரதேச மாநில நீதிமன்றங்கள் மற்றும் காவல்துறையின் கேட்டுக்கொண்டுள்ளது. தனக்கு எதிரான 6 முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக்கோரி பத்திரிக்கையாளர் முகமது ஜுபைர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார்.
இந்த வழக்குகளில் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை வைத்திருந்தார். இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் அவசர வழக்காக விசாரிக்கப்பட்ட நிலையில் வழக்கு அடுத்த புதன்கிழமை விரிவாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் அதுவரை முகமது ஜுபைர் மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என உத்தரப்பிரதேச நீதிமன்றங்கள் மற்றும் காவல்துறையை உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது