தமிழ்நாடு முழுவதும் நடப்பு கல்வியாண்டில் பொது காலாண்டு தேர்வு இல்லை என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. செப்.30-ம் தேதிக்குள் காலாண்டு தேர்வை நடத்தி முடிக்க மற்றும் தேர்வு பட்டியலை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களே தயாரித்துக் கொள்ள தேர்வுத்துறை அனுமதி அளித்துள்ளது.
தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின்பு 12 ஆம் வகுப்புக்கு ஜூன் 20 ஆம் தேதியும், 11 ஆம் வகுப்புக்கு ஜூன் 27 ஆம் தேதியும் வகுப்புகள் தொடங்கப்பட்டன. அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும், முதல் பருவத் தேர்வுகள் கடந்த மாதம் நடத்தி முடிக்கப்பட்டன.
நடப்பு கல்விஆண்டுக்கான நாள்காட்டியை பள்ளி திறப்புக்கு முன்னரே தமிழக அரசு வெளியிட்டது. அதில், பள்ளி இயங்கும் நாட்கள், விடுமுறை விவரங்கள், காலாண்டு, அரையாண்டு, பொதுத்தேர்வு நடைபெறும் நாட்கள் உள்ளிட்ட தகவல்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன.
மேலும், காலச் சூழலுக்கேற்ப தேதிகளில் மாற்றம் செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நடப்பாண்டில் பள்ளி மாணவர்களுக்கு பொது காலாண்டு தேர்வு இல்லை என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.