புதிய கட்சி தொடங்கும் எண்ணம் தற்போதைக்கு இல்லை என அரசியல் வியூக நிபுணர் பிரஷாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியில் இணைவதற்கான அக்கட்சியின் அழைப்பை நிராகரித்த அரசியல் வியூக நிபுணர் பிரஷாந்த் கிஷோர் சமீபத்தில் வெளியிட்டிருந்த டுவிட்டர் பதிவு அவர் தனி கட்சி தொடங்க போகிராறோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியிருந்தது. மக்களிடம் நேரடியாக செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டதாக டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில் தனிக்கட்சி குறித்த மக்களின் சந்தேகங்களுக்கு முற்றுப் புள்ளி வைத்துள்ள பிரஷாந்த் கிஷோர், பீகாரில் தற்போதைக்கு தேர்தல் எதுவும் இல்லாததால் புதிய கட்சி தொடங்கும் எண்ணம் தற்போதைக்கு இல்லை, பீனாரில் 3 ஆயிரம் கிலோ மீட்டருக்கு பாத யாத்திரை செல்ல உள்ளதாகவும் அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு மக்களை நேரிடையாக சென்று சந்திக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். பிரஷாந்த் கிஷோரின் இந்த அறிவிப்பு புதிய கட்சிக்கான முன்னோட்டமாகவே பார்க்கப்படுகிறது.