சென்னை மேயரை அதிமுக ஆட்சி காலத்தில் “மாண்புமிகு” மேயர் என அழைக்க வேண்டும் என மாற்றப்பட்ட அரசாணையை “வணக்கத்திற்குறிய” மேயர் என மாற்றுவது குறித்து முதலமைச்சர் பரிசீலிப்பார் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை கே.கே.நகரில் 23-வது மெகா தடுப்பூசி முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ஆகியோர் துவக்கி வைத்தனர். அப்போது பேசிய அமைச்சர், அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா, தனக்கு மேல் யாரும் இருக்க கூடாது என்று நினைத்து, ’வணக்கத்துக்குரிய மேயர்’ என்பதை ‘மாண்புமிகு மேயர் என மாற்றி அரசாணை வெளியிட்டார் என குற்றச்சாட்டினார். எனவே இனி மேயரை வணக்கத்திற்குறிய மேயர் என அழைக்க வேண்டும் என்ற அரசாணை குறித்து முதலமைச்சர் பரிசீலிப்பார் என்றார்.