இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலி, விரைவில் மாநிலங்களவை உறுப்பினராக அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வௌியாகியுள்ளது.
மாநிலங்களவை உறுப்பினர்கள் சிலரை நியமிக்கும் அதிகாரம் குடியரசு தலைவருக்கு உண்டு. அந்த வரிசையில் சச்சின் டெண்டுல்கரை தொடர்ந்து, பிசிசிஐ தலைவரான சவுரவ் கங்குலியை மாநிலங்களவை உறுப்பினராக குடியரசு தலைவர் நடப்பு மாதம் அறிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கான பரிந்துரையை மத்திய அரசு முன்வைத்துள்ளதாகவும், மேற்குவங்கத்தை மையப்படுத்தி அவருக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்பட உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. அண்மையில் கங்குலி வீட்டிற்கு சென்று உள்துறை அமைச்சர் அமித்ஷா இரவு விருந்தில் கலந்து கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.