நார்வே செஸ் போட்டியில் வெற்றி – கிராண்ட் மாஸ்டரான விஸ்வநாதன் ஆனந்த்

 

இந்திய கிராண்ட் மாஸ்டரான விஸ்வநாதன் ஆனந்த், நார்வே செஸ் போட்டியில் தொடர்ச்சியாக 3-வது வெற்றியை பதிவு செய்துள்ளார். நார்வே நாட்டின் ஸ்டாவஞ்சர் நகரில் கிளாசிக்கல் செஸ் போட்டி நடைபெற்று வருகிறது.

முன்னணி வீரர்கள் 10 பேர் கலந்து கொண்டுள்ள இந்தத் தொடரின் முதல் சுற்றில் இந்திய கிராண்ட் மாஸ்டரான விஸ்வநாதன் ஆனந்த், பிரான்ஸின் மாக்சிம் வச்சியர்-லாக்ரேவை வீழ்த்தியிருந்தார்.

2-வது சுற்றில், பல்கேரியாவின் வெசெலின் டோபலோவை எதிர்கொண்ட விஸ்வநாதன் ஆனந்த் 36-வது காய் நகர்த்தலின் போது வெற்றி பெற்றார். இதையடுத்து இன்று மூன்றாவது சுற்றில் சீனாவின் வாங் ஹாவோவை எதிர்கொண்ட நிலையில்  அவரையும் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்.  கிளாசிக்கல் பிரிவில் தொடர்ந்து 3 வெற்றிகளை பதிவு செய்த விஸ்வநாதன் ஆனந்த் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் நீடித்து வருகிறார்.

 

Translate »
error: Content is protected !!