தேனி பெரியகுளம் பகுதியில் உள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் பண்ணை வீட்டில், அக்கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் திடீர் சந்திப்பு நடத்தியுள்ளனர். சசிகலா மற்றும் தினகரனை அதிமுகவில் இணைக்க வேண்டும் என்று அதிமுகவினர் கூறி வரும் நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜு, தேனி அதிமுக மாவட்டச் செயலாளர் சையது கான், துணை செயலாளர் முருக்கோடை ராமர், தேனி மக்களவை முன்னாள் உறுப்பினர் பார்த்திபன் ஆகியோர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளனர். அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஆர்.பி. உதயகுமார் மற்றும் பிரமுகர்கள் இது வழக்கமான சந்திப்பு தான் என்றும், மரியாதை நிமித்தமாக சந்தித்ததாவும் கூறியுள்ளனர்.